தயாரிப்பு நேரம்:
தயாரிப்பு நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 4 பேர்
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – அரை குழி கரண்டி
சீரகம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
- பீன்ஸை மீடியம் சைஸில் நறுக்கவும்.ஒரு சிறிய குக்கரில் தண்ணீர் ஊற்றி பீன்ஸ் சேர்த்து ஒரு ஆவி வேக வைக்கவும்.
- வாணலியில் அரைகுழி கரண்டி எண்ணெய் சூடேற்றி சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து லேசாக வதக்கவும்.
- அதில் சதுரமாக வெட்டிய உருளைக்கிழங்குகளை சேர்த்து நன்கு ரோஸ்ட் செய்யவும். உருளைக்கிழங்கு சிவக்கும் போது மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.
- வேகவைத்த பீன்ஸை சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் மிளகாய் தூள், தனியா தூள், மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.
- ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் சமைக்கவும், மசாலா பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு நன்கு கலக்கும் வரை சமைக்கவும்.
குறிப்புகள்:
பீன்ஸ் ஒரு ஆவி வேக வைத்தால் வேகும் நேரம் குறையும்.
குறைந்த எண்ணெயில் இதை ருசியாக தயாரிக்க முடியும்.
சப்பாத்தி, புல்கா அல்லது சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும்.
காலை அல்லது இரவு உணவில் இந்த சப்ஜியை நீங்கள் சமைத்து உண்ணலாம்.