
தயாரிப்பு நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 3 பேர்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 500 கிராம் (நீளமாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 250 கிராம் (நீளமாக நறுக்கியது)
வெங்காயம் – 2 (நன்றாக நறுக்கியது)
தக்காளி – 3 (நன்றாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
இஞ்சி – சிறிதளவு (நன்றாக நறுக்கியது)
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் (கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம்)
மசாலா பொருட்கள்:
மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
ஜீரகம் – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
2. எண்ணெய் சூடானதும் ஜீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வறுக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
3. கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் சமைக்கவும்.
4. கறி பாதியாக சமைந்ததும் நடுவில் சிறு குழி செய்து நறுக்கிய தக்காளி சேர்த்து மூடி வைத்து 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
5. தக்காளி நன்றாக குழைந்தவுடன் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
6. காய்கறிகள் நன்றாக வெந்தவுடன், இறுதியாக சிறிது கரம் மசாலா தூவி அடுப்பை அணைத்து கறியை இறக்கவும்.
குறிப்புகள்:
1. கத்தரிக்காயை நறுக்கி நீரிலே போட்டு வைத்தால் அது கருமையாக மாறாமல் இருக்கும்.
2. கடுகு எண்ணெயில் சமைத்தால் சுவை மிகவும் அதிகமாக இருக்கும்.
3. விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காயை சமைத்தால் சப்ஜியின் சுவை நன்றாக இருக்கும்.
காலை அல்லது இரவு உணவிற்கு சப்பாத்தி மற்றும் புல்காவுடன் எடுத்துக் கொள்ளலாம்.