தயாரிப்பு நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 4 பேருக்கு போதுமானது
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – அரைக்கிலோ
தக்காளி – 5
பச்சை மிளகாய் – 5
சிறிய இஞ்சி துண்டு – 1
ஜீரகம் – 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
காரம் (மிளகாய் தூள்) – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய்
தண்ணீர்
செய்முறை:
- உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி, குக்கரில் போடவும். அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து, மூடி மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். பிரஷர் குறைந்த பிறகு, உருளைக்கிழங்கை எடுத்து கைகளால் சிறிதளவு மசித்துக் கொள்ளவும். இவ்வாறு வேகும் பொழுது சேர்த்த உப்பால், உருளைக்கிழங்கு நன்றாக வெந்து சுவையாக இருக்கும்
- அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சீரகம் சேர்த்து பொரிக்க விடவும். பின்னர் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும். மிளகாய் தூளைச் சேர்க்கும் போது, குறைவாக சேர்க்கவும்; இல்லையெனில் சப்ஜி மிகவும் காரமாகிவிடும்.
- தக்காளி நன்றாக வெந்து, எண்ணை பிரிந்த பிறகு, மசித்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக கலக்கவும். இந்த நேரத்தில் கரம் மசாலா தூள் சேர்த்து, எல்லா மசாலாக்களுடனும் உருளைக்கிழங்கும் தக்காளியும் நன்றாக மிக்ஸ் ஆகும் வரை கரண்டியால் நன்றாகக் கிளறவும்.
- இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி வரும் வரை கொதிக்க விடவும். சப்ஜி கொதிக்கும் போது, கசூரி மேத்தியை கைகளால் லேசாக கசக்கி மேலாக தூவவும். அடுப்பை அணைத்து, இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து, மசாலாக்கள் அனைத்தும் சப்ஜியுடன் நன்றாக கலக்குமாறு விடவும். பிறகு, இதை சூடாக, பொரித்த பூரியுடன் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
குறிப்புகள் (Tips)
1. நெய்யை பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.
2. மிளகாய் தூள் அதிகம் சேர்க்க வேண்டாம்.
3. காரம் குறைவாக இருந்தால் சப்ஜி சுவையாக இருக்கும்.
4. இதை விரத காலங்களில் சமைக்கலாம், ஏனென்றால் இதில் வெங்காயம், பூண்டு சேர்க்கப்படுவதில்லை.
5. உருளைக்கிழங்கை மொத்தமாக மசிக்காமல், பெரிய துண்டுகளாக வைக்கவும்.