
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
தயாரிக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 3 பேருக்கு
தேவையான பொருள்கள்:
முள்ளங்கி: 250 கிராம்
முள்ளங்கி கீரை
பச்சை மிளகாய்: 2
பூண்டு: 4 பற்கள்
இஞ்சி: 1 சிறிய துண்டு
எண்ணெய்: ½ குழி கரண்டி
சீரகம்: ½ டீஸ்பூன்
தனியா தூள்: 1 டீஸ்பூன்
உப்பு: 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்: ¾ டீஸ்பூன்
வரமிளகாய் தூள்: ½ டீஸ்பூன்
பெருங்காயத்தூள்: ½ டீஸ்பூன்
செய்முறை:
1. முள்ளங்கியை தோல் சீவி, சதுரமாக நறுக்கவும். முள்ளங்கி கீரையை நன்றாக கழுவி, காம்புகளை நீக்கி மிகப் பொடியாக நறுக்கவும்.
2. பூண்டு மற்றும் இஞ்சியை நசுக்கி அல்லது பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை மிகப் பொடியாக நறுக்கவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயை சூடாக்கி சீரகத்தை தாளிக்கவும்.
4. தாளித்த பிறகு, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. முள்ளங்கி துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் சமைக்கவும். நடுநடுவே கிளறவும்.
6. 5 நிமிடங்களுக்கு பிறகு, நறுக்கிய முள்ளங்கி கீரையை சேர்த்து, தனியா தூள் மற்றும் வரமிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக பிரட்டி கொடுக்கவும்.
7. மூடியை மூடி, மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்கவும். நடுநடுவே கிளறி கொடுத்து, கீரையும் முள்ளங்கியும் நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
8. இறுதியில், பெருங்காயத்தூளை தூவி, நன்றாக கலக்கி இறக்கவும்.
குறிப்புகள்:
முள்ளங்கி கீரை இளசாக இருக்க வேண்டும்.
இது சப்பாத்தி மற்றும் புல்காவுடன் சாப்பிடுவதற்கு சிறந்ததொரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாகும்.